VALAYIL OOTACHATHU MELANMAI
Materialtyp:
ArtikelUtgivningsinformation: Thanjavur, Tamil Nadu Skyfox Publishing Group Skyfox Publishing Group [Imprint] 2020Beskrivning: 1 electronic resource (40 p.)Innehållstyp: - text
- computer
- online resource
- 978-81-939536-4-8
Open Access Unrestricted online access star
வாழைக்கு உரங்கள் மற்றும் தொழு உரம் போன்றவை மிக அவசியம். மண் வளம், இரகம் மற்றும் தட்பவெப்ப நிலையைப் பொறுத்து ஊட்டச்சத்து அளிக்கும் அளவு மாறுபடும். அதிக பரப்பளவில் அதிக எண்ணிக்கையிலான இலைகளைப் பெறவும், வளர்ச்சியை துரிதப்படுத்தவும், ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்காற்றுகின்றன. வாழையின் நல்ல வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு உரிய நேரத்தில், சரியான அளவில் ஊட்டச்சத்துக்களைப் அளிப்பது அவசியம். சரியான அளவில் ஊட்டச்சத்துக்களை அளிப்பதாலும், மேலாண்மை செய்வதாலும் பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கலாம். இதனால் பற்றாக்குறை அல்லது நச்சுத்தன்மையால் ஏற்படும் விளைவுகளை தடுக்கலாம். பேரூட்டச்சத்துக்கள் என்பவை பயிருக்கு அதிக அளவில் தேவைப்படுபவை. இவற்றில் ஒன்று குறைந்தாலும், அதனை மண்ணில் தேவையான அளவு இடுவது அவசியம். நுண்ணூட்டச்சத்துக்கள் பயிருக்கு குறைந்த அளவில் தேவைப்படுபவை. இவை குறைந்த அளவில் அளிக்கப்பட்டாலும் பயிர் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அங்கக உரங்கள் அல்லது தொழு உரங்கள் பயிர்களுக்கு ஊட்டச்சத்துக்களாக விவசாயிகளால் இடப்படுகின்றன. இவ்வுரங்கள் மண்ணில் அங்ககச் சத்தினை அதிகரிக்கின்றன. இவ்வகைச் சத்துக்கள் பயிருக்குத் தேவையான உணவினை வெளிவிடுகின்றன.
Accessibility options of PDF file not available
Creative Commons Licence cc by cc https://creativecommons.org/licenses/by/4.0/
tam
Freely available e-book